தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கு சிறப்புச் செபம்
ஏப்.29,2013. தாய்மார்களுக்கும், மண்ணில் பிறக்காமல் தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கும்
செபிப்பதற்கென தேசிய அளவிலான மாலை செபவழிபாட்டை, இச்சனிக்கிழமை நடத்த உள்ளது அயர்லாந்து
திருஅவை. அயர்லாந்தின் புகழ்பெற்ற Knock மரியன்னை திருத்தலத்தில் இடம்பெறவுள்ளஇத்திருவழிபாட்டு
செபத்திற்கு அந்நாட்டு ஆயர் பேரவை ஏற்பாடுச் செய்துள்ளது. பிற்பகல் ஒரு மணிக்கு செபமாலை
ஊர்வலத்துடன் துவங்கும் இவ்வழிபாடு, மாலை மூன்று மணிக்குத் துவங்கும் திருப்பலியுடன்
நிறைவுபெறும். Armagh பேராயர் கர்தினால் Seán Brady தலைமையில் இடம்பெறும் இத்திருப்பலியில்,
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு சிறப்பு ஆசீர் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.