2013-04-29 17:02:34

Kazakhstan நாட்டில் மதச்சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரானசித்ரவதைகள் அதிகரிப்பு


ஏப்.29,2013. Kazakhstan நாட்டில் மதச்சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரானசித்ரவதைகள் அதிகரிப்பதாகவும், மதச் சுதந்திரம் என்பது அங்கு இல்லை எனவும் குறை கூறியுள்ளனர் மனிதஉரிமை ஆர்வலர்கள்.
மதப் புத்தகங்களைக் கொண்டிருப்பதற்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், மதம் குறித்தவிடயங்களைப் பொதுவில் விவாதிப்பதற்குத் தடைகள் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் அவர்கள்.
பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளபுத்தகங்கள் குறித்து அரசின் ஆய்வுகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், மனிதஉரிமை மற்றும் மதநடவடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய குழுக்கள், பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை மற்றும் Jehovahவின் சாட்சிகள் ஆகிய குழுக்கள் மீது இவ்வாண்டு துவக்கத்திலிருந்தே அரசின் சித்ரவதைகள் அதிக அளவில் இடம்பெற்றுவருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதத்தைப் போதிக்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும், பேச்சு சுதந்திரம் என்பது மதத்தை போதிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கவில்லை எனவும், உரிமை நடவடிக்கையாளர்கள் குறைகூறியுள்ளனர்.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.