2013-04-26 15:54:11

இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் அதிவேக இரயில் பாதைகள்


ஏப்.26,2013. இலங்கையின் வடபகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரும் இரயில் பாதைகள், மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவிதத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த வேலைத்திட்டத்தின் தலைவர் எஸ்.எல்.குப்தா தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செய்தி வழங்கிய அவர், மதவாச்சியிலிருந்து மன்னார் வரையில் 43 கிலோமீட்டர் தூர இரயில்பாதை முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பாதையில் மணிக்கு 120 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் இரயில்கள் செல்லலாம் என்றும் குப்தா கூறியுள்ளார்.
இத்திட்டத்திற்கென இந்திய அரசு 80 கோடி டாலர்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : ANI







All the contents on this site are copyrighted ©.