2013-04-22 17:13:27

இனமற்றும் மதஅடிப்படையில் குடியிருப்புகளை உருவாக்குவதை எதிர்க்கிறார் ஈராக் முதுபெரும் தலைவர்


ஏப்.22,2013. ஈராக்கின் கிறிஸ்தவர்களும் ஏனைய மக்களும் இனம், மதம் என்ற அடிப்படைகளின்கீழ் தங்களுக்கிடையே தடைச்சுவர்களுடன் கூடிய குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழமுடியாது என்றார் அந்நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் லூயிஸ் ரஃபேல் சாக்கோ.
பிரிவினைவாதத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்ற அணுகுமுறை தவறானது எனவும் கூறிய முதுபெரும்தலைவர், ஈராக் கிறிஸ்தவர்களுக்கு என, தனிக் குடியிருப்பை ஒதுக்குவது என்ற ஆலோசனை அவர்கள் தனிமையில் ஒதுக்கப்பட்டு வாழும் நிலைக்கே தள்ளும் என்றார்.
ஒவ்வொருவரையும் பிரித்து வாழவைக்க முயல்வதைவிட, அனைத்து இன மற்றும் மதமக்களுக்கு சம குடியுரிமைகளை வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் எனவும் கூறினார் அவர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.