ஏப்ரல் 17, 2013. இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்தில், 'இயேசு வானகத்திற்கு எழுந்து
சென்றது, அவர் நம்மிடையே இல்லாதிருப்பதைக் குறிக்கவில்லை, மாறாக அவர் ஒவ்வொருவருக்கும்
நெருக்கமாக ஒரு புதிய விதமாக, நம்மிடையே உயிரோடு வாழ்கிறார் என்பதைக் குறிக்கிறது' என்று
ஒரு செய்தியும், ‘கடவுளின் மகிமையில் நுழைவது என்பது, தியாகங்களை ஆற்ற வேண்டியிருந்தாலும்,
கடவுளின் விருப்பத்திற்கு தினமும் விசுவாசமாக இருப்பதை எதிர்பார்க்கிறது' என்று இன்னொரு
செய்தியும் வழங்கியுள்ளார் பாப்பிறை பிரான்சிஸ்.