2013-04-17 16:44:04

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், உரோம் நகரின் முக்கிய சதுக்கத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி


ஏப்.17,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், மக்கள் சதுக்கம் என்று அழைக்கப்படும் உரோம் நகரின் முக்கிய சதுக்கத்தில் ஏப்ரல் 20, இச்சனிக்கிழமை மாலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ஒன்றை உரோம் நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
உரோம் நகர மேயர் Gianni Alemanno, மற்றும் உதவி மேயர் Sveva Belviso ஆகியோரின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்படும் நான்கு மணி நேர நிகழ்ச்சியில், ஆர்ஜென்டினா நாட்டின் பாரம்பரிய பாடல்களும், நடனங்களும் முக்கியமாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் நகரில் உள்ள ஆர்ஜென்டினா தூதரகத்தின் உதவியுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், திருத்தந்தை பிரான்சிஸ் மீது கொண்டுள்ள மதிப்பினால், அந்நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் இலவசமாக இந்நிகழ்ச்சிகளை ஆற்றவுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.