2013-04-15 16:50:39

மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளை புதிய திருத்தந்தை ஊக்குவிப்பார், கவுகாசுஸ் இஸ்லாமியர்கள் நம்பிக்கை


ஏப்.15,2013. புதியத் திருத்தந்தையாக பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது, கவுகாசுஸ் இஸ்லாமியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மதங்களிடையே பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத்துழைப்புக்கும் திருத்தந்தை சிறப்புப் பங்காற்றுவார் என தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் அப்பகுதியின் இஸ்லாமியத் தலைவர் Allahshukur Pashazade அறிவித்தார்.
அசர்பெய்ஜான் நாட்டில் 450 கத்தோலிக்கர்களே வாழும் நிலையில், அந்நாட்டு தலைகநகர் பாக்குவில் பணியாற்றும் அன்னை தெரேசா பிறரன்பு சபையின் ஐந்து கன்னியர்களின் பணி பெரும்பாலும் இஸ்லாமிய மக்களுக்கானதாகவே உள்ளது என ஆசியச் செய்தி நிறுவனம் அறிவிக்கின்றது.
சகிப்புத்தன்மை, ஒருவர் ஒருவர்மீது கொள்ளும் மதிப்பு மற்றும் ஒத்துழைப்பை நடைமுறை வாழ்வாகக் கொண்டிருக்கும் அசர்பெய்ஜான் நாட்டுக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான உறவு குறித்து இஸ்லாமிய சமுதாயம் மகிழ்ச்சி அடைவதாகவும், மதங்களிடையே உருவாகவேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கு, புதிய திருத்தந்தை ஊக்கமளித்து சிறப்புப் பங்காற்றுவார் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் திருத்தந்தைக்கு வாழ்த்துசெய்தியை இஸ்லாமியை தலைவர் Pashazade ஏற்கனவே அனுப்பியிருந்தார்.

ஆதாரம் AsiaNews







All the contents on this site are copyrighted ©.