2013-04-15 16:57:42

நாட்டை விட்டு வெளியேறுவதா, அல்லது சாவதா என்ற குழப்பத்தில் சிரியா நாட்டு கிறிஸ்தவர்கள்


ஏப்.15,2013. நாட்டைவிட்டு வெளியேறுதல் அல்லது நாட்டிற்குள்ளேயே கொல்லப்படுதல் என்ற அபாயகரமானச் சூழலை, சிரியா நாட்டு கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கி வருவதாக கவலையை வெளியிட்டார் டமாஸ்கஸின் மாரோனைட் பேராயர் Samir Nassar.
ஒவ்வொரு நாளும் நாட்டில் வெடிகுண்டுகளாலும், போதிய மருத்துவ வசதிகளின்மையாலும், சத்துணவின்மையாலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பொதுமக்கள் பலர் இறந்து வருவதாக உரைத்தார் ஆயர் Nassar.
இதுவரை நாட்டில் 223 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் உரைத்த ஆயர் Nassar, பாதுகாப்பையும் உதவியையும் நாடி மக்கள் திருஅவையை நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டாம் என அறிவுறுத்துவது அவர்களை கொலைக்களத்திற்கு இட்டுச்செல்ல உதவுவதுபோல் இருக்கும் என்ற ஆயர், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற உதவினால் அது விவிலிய இடங்களை கிறிஸ்தவர்களே இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு உதவும் என்ற திருஅவையின் மனக்குழப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் ICN







All the contents on this site are copyrighted ©.