2013-04-15 16:55:01

சொமாலியாவில் நம்பிக்கையின் அடையாளங்களைக் காணமுடிந்ததாக ஆயர்


ஏப்.15,2013. சொமாலி தலைநகரில் புதிய நிர்வாக அமைப்பின் கீழ் அனைத்தும் இதுவரை வரவில்லையெனினும், நம்பிக்கையின் உண்மையான அடையாளங்களை காணமுடிகிறது என்றார் அங்கு அண்மையில் சென்று திரும்பிய Djibouti ஆயர் Giorgio Bertin.
சொமாலி தலைநகர் Mogadishuவின் அப்போஸ்தல நிர்வாகியாகவும் இருக்கும் ஆயர் Bertin உரைக்கையில், ஆறு ஆண்டுகளூக்குப்பின் தற்போதுதான் தன்னால் அங்கு போக முடிந்துள்ளது எனவும், துப்பாக்கிச்சத்தங்கள் குறைந்து, கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்படுவதையும், அங்கு சுமுக நிலை திரும்பிவருவதையும் நேரடியாகக் காணமுடிந்தது என்றும் கூறினார்.
தலைநகர் Mogadishuவிற்கு தான் பயணம் மேற்கொண்டது அங்குள்ள மக்களின் இன்றைய நிலைகள் குறித்து ஆராயவும், சொமாலிய காரித்தாஸ் பிறரன்புப் பணிகளைப் பார்வையிடவுமே என்றார் ஆயர் Bertin.
தங்கள் குடியிருப்புக்களை இழந்த மக்கள் தலைநகர் பேராலயத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த ஆயர் Bertin, அதனைச் சீரமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அரசு அதிகாரிகளுடன் தான் மேற்கொண்டு திரும்பியுள்ள பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் Djibouti ஆயர் Bertin.

ஆதாரம் FIDES







All the contents on this site are copyrighted ©.