2013-04-10 16:55:38

வடகொரியா விடுத்துவரும் கூற்றுகள் தென் கொரிய ஆயர்களுக்குப் பெரும் மனவேதனையை அளிக்கிறது - ஆயர் பேரவையின் தலைவர்


ஏப்.10,2013. உலக அமைதியைக் குலைக்கும் வண்ணம் வடகொரியா விடுத்துவரும் கூற்றுகள் தென் கொரிய ஆயர்களுக்குப் பெரும் மனவேதனையை அளிக்கிறது என்று தென் கொரிய ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Peter Kang U-Il கூறினார்.
வடகொரியா விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு தென் கொரிய மக்கள் பழக்கமானவர்கள் என்றாலும், இவ்விரு நாடுகளின் அமைதிக்குப் பெரும் ஆபத்தை உருவாக்கும் சூழல் இவ்வகையில் தொடர்வது நல்லதல்ல என்று ஆயர் Kang U-Il தெளிவுபடுத்தினார்.
வடகொரிய அரசியல் தலைவர்களால் கடந்த 60 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளால் அந்நாட்டின் பொதுமக்கள் வெளி உலகினின்று முற்றிலும் பிரிக்கப்பட்டு, பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருவதைத் தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஆயர் கூறினார்.
ஏனைய நாடுகளின் தூதரகங்களுக்கு வடகொரிய அரசு விடுத்துள்ள பாதுகாப்புக் கெடு ஏப்ரல் 10 இப்புதனுடன் முடிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.