2013-04-09 16:13:10

எகிப்தியக் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு அழைப்பு


ஏப்.09,2013. எகிப்தின் கெய்ரோவில் புனித மாற்கு காப்டிக் ஆர்த்தடாக்ஸ் பேராலயம் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டிருக்கும்வேளை, அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அலெக்ஸாண்டிரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros.
எகிப்தில் இனவாதக் கலவரத்தில் கொல்லப்பட்ட நான்கு காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு இஞ்ஞாயிறன்று அடக்கச்சடங்கு நடைபெற்றபோது இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 2 கிறிஸ்தவர்கள் இறந்துள்ளனர் மற்றும் 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
எகிப்தில் பாதுகாப்பையும் தேசிய ஒன்றிப்பையும் காக்கும் நோக்கத்தில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுள்ளார் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros.
இதற்கிடையே, எகிப்திய அரசுத்தலைவர் Mohammed Morsi, நாட்டில் வன்முறையை நிறுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளதாக முதுபெரும் தலைவர் Tawadros அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.