2013-04-08 16:42:31

இலங்கையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது அதிகரிப்பு


ஏப்.08,2013. இலங்கையின் தென்பகுதியில் கிறிஸ்தவ கோவில்களும் மதபோதகர்களும் புத்தமத அடிப்படைவாதக் குழுக்களால் தாக்கப்படுவது கடந்த ஆறு வாரங்களாக அதிகரித்து வருவதாக கிறிஸ்தவ உதவி அமைப்புகள் தெரிவிக்கின்றன.
புத்தக் குழுக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்படுவதால் தென்பகுதியில் சில கோவில்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மறைபோதகர்கள் தங்கள் வீடுகளில் விசுவாசிகளுடன் செபக்கூட்டங்களை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சில புத்தமதக் குழுக்கள், மீறுபவர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
கிறிஸ்தவ மதபோதகர்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று தாக்கும் குழுக்களுக்கு புத்தமத பிக்குகளே தலைமைத்தாங்கிச் செல்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் - AsiaNews








All the contents on this site are copyrighted ©.