2013-04-05 15:56:40

வட கிழக்கு இந்திய ஆயர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏழைகள்மீது கொண்டிருக்கும் அக்கறையை மீண்டும் வலியுறுத்தல்


ஏப்.05,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏழைகள்மீது கொண்டிருக்கும் அக்கறையைப் பிரதிபலிக்கும் விதமாக, வட கிழக்கு இந்திய கத்தோலிக்கத் திருஅவை தனது மேய்ப்புப்பணித் திட்டங்களை வகுத்துள்ளது.
இவ்வியாழனன்று நிறைவடைந்த, வட கிழக்கு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 3 நாள் கூட்டத்தின் இறுதியில் அப்பேரவையின் 15 ஆயர்களும் இணைந்து வெளியிட்ட மேய்ப்புப்பணி அறிக்கையில் இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆயர்களின் இந்த மேய்ப்புப்பணித் திட்டங்கள் குறித்துப் பேசிய, அந்த ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Dominic Jala, நமது விசுவாசத்துக்கும் ஏழைகளுக்கும் இடையே முக்கியமான தொடர்பு உள்ளது என்று கூறினார்.
Agartalaவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்துப் பேசிய பேராயர் Dominic, வேலைவாய்ப்பின்மை, ஒழுக்கநெறிகளும் நல்ல விழுமியங்களும் குறைந்து வருவது, அதிகரித்துவரும் நுகர்வுத்தன்மை, உலகாயுதப்போக்கு போன்ற விவகாரங்கள் குறித்து ஆயர்கள் கலந்து பேசினர் என்றும் கூறினார்.

ஆதாரம்: CBCI







All the contents on this site are copyrighted ©.