2013-04-04 15:56:18

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க அலெக்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் விருப்பம்


ஏப்.04,2013. உரோம் நகர் சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க தான் விழைவதாக, அலெக்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros விருப்பம் தெரிவித்துள்ளார்.
அரேபிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களை, எகிப்தின் திருப்பீடச் செயலராகப் பணியாற்றும் பேராயர் Jean-Paul Gobel இப்புதன் மாலை சந்திக்கச் சென்றபோது, முதுபெரும் தலைவர் இந்த விருப்பத்தை வெளியிட்டார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களும் சந்திப்பது வரலாற்று சிறப்பு மிக்க கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு நிகழ்வாக அமையும் என்று Fides செய்தி மேலும் கூறுகிறது.
இரண்டாம் Tawadros அவர்களுக்கு முன் முதுபெரும் தலைவராகப் பணியாற்றிய மூன்றாம் Shenouda, 1973ம் ஆண்டு மே மாதம் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் – Fides / SeDoc








All the contents on this site are copyrighted ©.