2013-04-04 15:57:28

ஜப்பான் மீது திருத்தந்தை பிரான்சிஸ் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் - நாகசாகி பேராயர்


ஏப்.04,2013. கதிரவன் எழும் நாடென வழங்கப்படும் ஜப்பான் மீது திருத்தந்தை பிரான்சிஸ் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்றும், அவர் Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் கர்தினாலாகப் பணியாற்றியபோது தன் மறைமாவட்ட குருக்கள் பலரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார் என்றும் நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami கூறினார்.
இயேசு சபையின் முன்னாள் உலகத் தலைவர் பேத்ரோ அருப்பே, மற்றும் தற்போதைய உலகத் தலைவர் Adolfo Nicolás ஆகியோரைப் போல, ஜப்பான் நாட்டின் மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கர்தினாலாகப் பணியாற்றியபோது, அந்நாட்டில் பணிபுரியும் ஆவலை வெளியிட்டார் என்று பேராயர் Takami நினைவு கூர்ந்தார்.
400 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மறையைத் தழுவிய ஒரு சமுராய் வீரர் இறையடி சேர்ந்த 400வது ஆண்டு நிறைவு 2015ம் ஆண்டு நிகழும் என்பதை எடுத்துரைத்த நாகசாகி பேராயர் Takami, இவ்வீரரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகள் திருத்தந்தையின் உதவியுடன் விரைவில் நடைபெறும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.

ஆதாரம் – AsiaNews








All the contents on this site are copyrighted ©.