2013-04-04 15:36:23

கற்றனைத்தூறும் ... சில அரிய தகவல்கள்


உலகிலுள்ள உயிரினங்களை அவற்றின் உருவத்தோடு ஒப்பிடும்போது, மிகப் பெரிய மூளை எறும்புக்குத்தான் இருக்கிறது. எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினம். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 22 ஆயிரம் எறும்பு இனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தேனீ ஒரு மணிநேரத்தில் 800 பூக்களில் தேன் எடுக்கும். தேனீ கூடுகட்டுவதற்கு 1.5 அவுன்ஸ் மெழுகைப் பயன்படுத்துகிறது.
நாய்க்கு 42 பற்களும், யானைக்கு 4 பற்களும் உள்ளன.
யானை நின்று கொண்டு தூங்கும் மிருகமாகும்.
ஒரு கொசு தன் எடையைப் போல் இரண்டு பங்கு இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு பறக்க முடியுமாம்.
காகிதக்குளவிகள் என்ற பூச்சிகள் கூடு கட்ட மரங்களைக் கடித்து துருவி, தன் உமிழ்நீரைக் கலந்து கூழாக்கி, காகிதம் போன்றதோர் பொருளை உருவாக்கி, அதனால் கூடு கட்டுகின்றன. இப்பூச்சிகளை முதலில் சீனர்கள் கண்டறிந்தார்களாம்.
40 மின்மினிப் பூச்சிகள் சேர்ந்தால், ஒரு மெழுகுவத்தி கொடுக்கும் பிரகாசத்தைக் கொடுக்க முடியும். தூக்கணாங்குருவிகள், மின்மினிப் பூச்சிகளை வெளிச்சத்துக்காகத் தன் கூட்டில் வைத்துக்கொள்ளும். மெக்ஸிகோவின் பழங்குடியினப் பெண்கள், மின்மினிப் பூச்சிகளைத் தங்கள் கொண்டையில் வைத்துக்கொள்வார்கள்.
ஆதாரம் – இணையதளங்கள்







All the contents on this site are copyrighted ©.