2013-04-04 15:58:38

அருள் பணியாளர் K.J. தாமஸ் அவர்களின் சாட்சிய மரணம் வீணாகப் போவதில்லை - கர்தினால் Oswald Gracias


ஏப்.04,2013. பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருமடத்தின் அதிபராய் பணியாற்றிய அருள் பணியாளர் K.J. தாமஸ் அவர்களின் சாட்சிய மரணம் வீணாகப் போவதில்லை என்றும், இதனால் இன்னும் பல இளையோர் இறைவனின் அழைப்பை ஏற்க முன்வருவர் என்றும் கர்தினால் Oswald Gracias கூறினார்.
உயிர்ப்பு ஞாயிறன்று அதிகாலையில் கொலையுண்ட அருள்தந்தை தாமஸ் அவர்களுக்கென பெங்களூருவில் நடைபெற்ற திருப்பலியில் இந்தியத் திருப்பீடத் தூதர் பேராயர் Salavatore Pennacchio, கர்தினால்கள் Oswald Gracias, மற்றும் Telesphore Toppo ஆகியோரின் இரங்கல் செய்திகள் வாசிக்கப்பட்டன.
புனித வியாழனன்று திருத்தந்தை ஆற்றிய புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில் அருள் பணியாளர்கள் மக்கள் மத்தியில் சென்று உழைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார், அந்த அழைப்பை தன் வாழ்வில் உணர்த்தியுள்ளார் அருள்தந்தை தாமஸ் என்று கர்தினால் Gracias தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அருள்தந்தை தாமஸ் அவர்களின் உடல் கேரளாவில் அவரது பிறந்த ஊரில் இச்சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இக்கொலை தொடர்பாக காவல் துறையினர் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதாரம் – AsiaNews








All the contents on this site are copyrighted ©.