ஏப்.02,2013. பீகார் மாநில கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண
உதவவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அம்மாநில முதல்வரைச் சந்தித்து விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளது
பீகார் கிறிஸ்தவ அவை. கிறிஸ்து உயிர்ப்பு வாழ்த்துக்களை வழங்கும்பொருட்டு மாநில முதல்வர்
நிதிஷ் குமாரைச் சந்தித்த கிறிஸ்தவக்குழு, மேல் அவையில் ஒரு கிறிஸ்தவர் நியமிக்கப்படுதல்,
மாநில சிறுபான்மையினருக்கான ஆணைக்குழுவில் ஒரு கிறிஸ்தவரை துணைத்தலைவராக நியமித்தல்,
எருசலேம் புனித பயணத்திற்கென கிறிஸ்தவர்களுக்கு நிதிஉதவிச்செய்தல் போன்ற விண்ணப்பங்களை
முன்வைத்துள்ளது. இதற்கிடையே, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முன்னர் சில கிறிஸ்தவ
கோவில்களை வந்து சந்திக்கும்படி இந்த கிறிஸ்தவ குழு விடுத்த அழைப்பைத் தான் ஏற்பதாக அறிவித்தார்
முதல்வர் நிதிஷ் குமார்.