2013-04-01 15:08:22

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தோனேசிய பேராயர் கவலை


ஏப்.01,2013. இந்தோனேசியாவில் தங்கள் வழிபாட்டுதலங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது மற்றும் வழிபாடுகள் தடைச்செய்யப்பட்டுள்ளதால் துன்பங்களை அனுபவிக்கும் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு பேராயர் ஒருவர்.
இந்நாட்களில் வன்முறைச் சம்பவங்கள் மிக எளிதாக இடம்பெறுகிண்றன என தன் உயிர்ப்புவிழாச் சிந்தனைகளில் குறித்துள்ள செம்ராங் பேராயர் Johannes Maria Trilaksyanta Pujasumarta, பிரச்சினைகளுக்கு வன்முறைகள் ஒருநாளும் தீர்வாக முடியாது என்பதையும் அச்செய்தியில் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
கிறிஸ்தவர்களூக்கு எதிரான வன்முறைகள் இந்தோனேசியாவில் இடம்பெற்றுவருவது குறித்தும் தன் கவலையை வெளியிட்ட பேராயர் Pujasumarta, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் தொடர்புடைய பிரச்சினைகளில், அவைகளை முறியடிக்க பிறரால் வன்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய சில குழுக்களே கிறிஸ்தவ கட்டிடங்கள் மீதான தாக்குதல்களை ஆதரிப்பது வருத்தம் தருவதாக உள்ளது என்ற பேராயர் Pujasumarta, மார்ச் மாதம் 21ம் தேதி பெகாசி மாவட்டத்தின் கிறிஸ்தவக் கோவில் ஒன்று தல அரசு அதிகாரிகளால் இடித்து சேதமாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் - UCAN








All the contents on this site are copyrighted ©.