2013-03-26 15:46:55

வியட்னாம் கர்தினால் : திருத்தந்தை பிரான்சிஸ், வியட்னாம் திருஅவைமீது சிறப்புக் கவனம் கொண்டுள்ளார்


மார்ச்,26,2013. திருத்தந்தை பிரான்சிஸ் வியட்னாம் திருஅவைமீது சிறப்புக் கவனம் கொண்டுள்ளார் என்று வியட்னாம் கர்தினால் Jean Baptist Phạm Minh Mẫn கூறினார்.
புதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இருமுறை சந்தித்தது மற்றும் கான்கிளேவ் அவையின் அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட கர்தினால் Phạm Minh Mẫn, திருத்தந்தையின் மோதிரத்தைத் தான் முத்தி செய்த இரண்டு நேரங்களிலும் அவர் தனது மோதிரத்தையும் முத்தி செய்தார் என்று கூறினார்.
இவ்வாறு செய்ததன் மூலம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வியட்னாம் திருஅவைமீதான தனது பாராட்டை வெளிப்படுத்தினார் என்றும், மிகுந்த இன்னல்கள் நிறைந்த சூழல்களிலும் வியட்னாம் தலத்திருஅவை விசுவாசத்துக்கு உயிருள்ள சாட்சியாக இருந்து வருவதற்கு ஊக்கத்தைப் பெற்றுள்ளது என்றும் கர்தினால் தெரிவித்தார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது எளிமையும், தனித்துவமான வரமும், பலரின் இதயங்களைத் தொட்டிருக்கின்றன, இவரது அழைப்பும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களது தாழ்மைப் பண்பும் கொரியாவில் கிறிஸ்தவரல்லாத பலரின் மனமாற்றத்துக்கு வித்திட்டுள்ளன என, தென் கொரியாவின் Daejeon ஆயர் Lazarus You Heung-sik, ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.