2013-03-26 15:53:41

யாங்கூன் பேராயர் : இனக்கலவரங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மதத்தலைவர்கள் உதவ முடியும்


மார்ச்,26,2013. மியான்மாரின் மத்தியப் பகுதியில் இடம்பெற்றுவரும் இனக்கலவரங்களுக்குத் தீர்வு காண்பதற்கு மதத்தலைவர்களைப் பயன்படுத்துமாறு அந்நாட்டின் யாங்கூன் பேராயர் சார்லஸ் போ அரசை வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும்முறையை ஊக்குவிப்பதற்கு, அரசியல் அமைப்போ, இராணுவமோ, எந்தச் சட்டமோ உதவாது, மாறாக, அன்புச் சட்டம் மட்டுமே உதவும் என்று பேராயர் போ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
மியான்மாரில் இனம் மதம் என்ற பாகுபாடின்றி அனைத்துக் குடிமக்களும் சமம் என்று கூறியுள்ள பேராயர் போ, கடந்த வாரத்தில் Meikhtilaவிலும், கடந்த கோடை காலத்தில் Rakhine மாநிலத்திலும் தொடங்கிய மதம் தொடர்புடைய வன்முறையில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதனன்று Meikhtilaவில் தொடங்கிய வன்முறையில் குறைந்தது 32 பேர் இறந்துள்ளனர் மற்றும் ஏறக்குறைய 9,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள்.
ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.