2013-03-23 16:03:28

பூமி நேரத்தில் 7,000 நகரங்கள் பங்கேற்பு


மார்ச்,23,2013. மார்ச் 23ம் தேதி அனுசரிக்கப்பட்ட பூமி நேரத்தில் உலகம் முழுவதும் 7,000 நகரங்கள் பங்கேற்றன.
இது குறித்து, உலக வன உயிர் மற்றும் இயற்கை நிதி அமைப்பின், தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ரிட்லி, உலகின் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, "எர்த் ஹவர்' எனப்படும் பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது எனக் கூறினார்.
கடந்த, 2007ம் ஆண்டு துவக்கப்பட்ட, பூமி நேரத்தின்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 22 இலட்சம் கட்டிடங்களில் உள்ள மின்விளக்குகள், ஒரு மணி நேரத்துக்கு அணைத்து வைக்கப்பட்டன.
2008ம் ஆண்டு முதல் உலகில் உள்ள பல நகரங்களில், பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும், 7,000 நகரங்கள் பூமி நேரத்தில் பங்கேற்றன. இவ்வாண்டு, பாலஸ்தீன், துனிசியா உள்ளிட்ட நாடுகளும், முதன்முறையாக பங்கேற்றன. இந்தியாவில் மட்டும் 150 நகரங்கள், பங்கேற்றன எனவும் ரிட்லி கூறினார்.
உலக பூமி நாளை முன்னிட்டு 7,000 நகரங்களில், இச்சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.
ஒரு மணி நேரம், விளக்குகள் அணைக்கப்படுவதால், கார்பன் உற்பத்தி தடுக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.