2013-03-15 16:59:17

10 கோடி மக்கள் பேசப்படும் மொழிகள்


மார்ச்,15,2013. உலக அளவில் 6,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் ஏற்க்குறைய 2,000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவான மக்களால் மட்டுமே பேசப்படுகின்றன.
உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே. அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், இந்தி, இஸ்பானியம், இரஷ்யம், அராபியம், பெங்காளி, போர்த்துகீசியம், மலாய், இந்தோனேசியம், பிரெஞ்ச், ஜப்பானியம், ஜெர்மானியம், உருது ஆகியனவாகும்.
உலகில் அதிக மக்களால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில், தமிழ், அராபியம், சீனம், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய 6 மொழிகளே பழமையான மொழிகள்.
பசிபிக் பெருங்கடலின் தென் மேற்கே அமைந்துள்ள பாப்வுவா நியூ கினி, உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு ஆகும். இந்நாட்டில் 850க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்ரிக்காவில் 2,000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 80 விழுக்காட்டு மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசிபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.