2013-03-12 16:32:23

பாஸ்டன் கர்தினால் : கத்தோலிக்க நலப்பணிகளுக்கு மனச்சான்றின் உரிமைகள் தேவை


மார்ச்,12,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் நலவாழ்வு சார்ந்த கூறுகளில் சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு உறுதியான ஆதரவு வழங்குமாறு அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பாஸ்டன் கர்தினால் Sean O’Malley.
வத்திக்கானில் இச்செவ்வாய் மாலை தொடங்கியுள்ள கான்கிளேவில் கலந்து கொள்ளும் கர்தினால் O’Malley உரோமையிலிருந்து எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனச்சான்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறுவது, அமெரிக்கர்களுக்குத் தரமான நலவாழ்வு கிடைப்பதற்கு இடையூறாக இருக்கும் என்றும் பாஸ்டன் கர்தினால் கூறியுள்ளார்.
“நலவாழ்வு மனச்சான்றின் 2013” என்ற விதிமுறைஎண் அங்கீகரிக்கப்பட்டால், கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதிலிருந்து மருத்துவர்களைக் காப்பாற்ற முடியும் எனவும், அமெரிக்க ஆயர்களின் வாழ்வுக்கு ஆதரவான ஆணைக்குழுத் தலைவர் கர்தினால் O’Malley அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.