2013-03-12 16:33:48

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள்


மார்ச்,12,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள் கொண்ட நூல் ஒன்று இஸ்பெயினிலுள்ள திருப்பீடத் தூதரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
HazteOir என்ற இஸ்பானிய குடியுரிமை இணையத்தளத்தின் தலைவர் Ignacio Arsuaga, இஸ்பெயினுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Renzo Fratiniடம் இந்நூலைக் கொடுத்துள்ளார்.
ஒரு பொது மக்கள் சமுதாயத்தில் மனித மாண்புக்கு ஆதரவாகப் பணி செய்வதற்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் எண்ணங்கள் உதவிசெய்வதற்கு நன்றியாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது என Arsuaga தெரிவித்தார்.
இந்நூல் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.