2013-03-09 15:54:53

ஏழு வயது இந்திய சிறுவன் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை


மார்ச்,09,2013. உலகிலேயே மிக இளம் வயதில், ஆப்ரிக்காவின் கிளிமாஞ்சாரோ மலை உச்சியைத் தொட்ட சிறுவன் என்ற பெருமையை, இந்தியச் சிறுவர் ஒருவர் பெற்றுள்ளார்.
Aaryan Balaji என்ற ஏழு வயதுச் சிறுவன், ஆப்ரிக்காவின் மிகவும் உயரமான கிளிமாஞ்சாரோ சிகரத்தில் (5895 மீட்டர்) ஏறி, மிகச் சிறிய வயதில் இந்தச் சிகரத்தை அடைந்த மலையேறும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்தச் சாதனையை படைத்துள்ளார் Aaryan Balaji.
இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் ஏந்திச் சென்று கிளிமாஞ்சாரோ மலை உச்சியில் பறக்கவிட்டு, நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார் ஏழு வயது Aaryan Balaji.
Aaryan Balaji, இந்தியக் கடற்படை அதிகாரி பாலாஜி என்பவரின் மகன் ஆவார்.
கடற்படை அதிகாரியான பாலாஜியும், எவரெஸ்ட் சிகரம், தென்முனை, வடமுனை மற்றும் இந்தியாவின் முக்கிய மலைச் சிகரங்களில் ஏறி சாதனை புரிந்தவர்.







All the contents on this site are copyrighted ©.