2013-03-08 15:25:14

மார்ச் 09, 2013. கற்றனைத்தூறும்...... முதன்மையானவை


உலகின் மிக நீளமான நதி நைல் நதி.
முதன் முதலாக நாட்டுப்பண்ணை உருவாக்கிய நாடு ஜப்பான்.
உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து தீவாகும். இதன் பரப்பளவு 2,175,600 சதுர கி.மீ.
பேரீச்சையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு ஈராக்.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் வட ஆப்ரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 84,00,000 சதுர கி.மீ.
பயணிகள் இரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
உலகிற்கு முதன்முதல் தபால் முத்திரையை அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்து.
உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு 776ல் கிரேக்க நாட்டில் நடைபெற்றது.
வாசிக்கக்கூடிய மூக்குக் கண்ணாடி 1290ல் முதன் முதல், இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் 971ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
கோள்களில் பெரியது ஜூபிடர்.
உலோகங்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது ப்ளூட்டோனியம்
உலகிலேயே இந்தியா, இலங்கை, பிலிப்பீன்ஸ் ஆகிய மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.
இந்தியாவில் உயரமான கோபுரம், 240அடி உடைய குதுப்மினார்.
இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி, மைசூரின் ஜெர்ஸொப்பா.
உலகிலேயே சிலைகள் அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000 சிலைகள் உள்ளன.

(ஆதாரம்: முத்தமிழ் மன்றம்)








All the contents on this site are copyrighted ©.