2013-03-08 15:24:58

இயேசு திருஅவையை, வானதூதர்களிடம் அல்ல, தவறிழைக்கும் மனிதரிடம் ஒப்படைத்திருக்கிறார், நைஜீரியக் கர்தினால்


மார்ச்,08,2013. பிரச்சனைகளோ, துர்மாதிரிகைகளோ இல்லாத ஒரு திருஅவையை இயேசு விரும்பியிருந்தால், அவர் அதனை, தான் அன்புசெய்யும் மனித சமுதாயத்திடம் ஒப்படைக்காமல் வானதூதர்களிடம் ஒப்படைத்திருப்பார் என்று, நைஜீரியக் கர்தினால் John Olorunfemi Onaiyekan தெரிவித்தார்.
வத்திக்கானில் இடம்பெற்றுவரும் கர்தினால்களின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நைஜீரியாவின் அபுஜா பேராயர் கர்தினால் Onaiyekan கத்தோலிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருஅவை சீர்திருத்தம் பெற்று, முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எவராது சொன்னால், அதனைத் திருஅவை ஏற்கிறது, ஏனெனில் திருஅவை தனது பயணத்தின் இறுதியை ஒருபோதும் அடையாது, திருஅவை எப்போதும் சீர்திருத்தத்தில் இருந்து கொண்டிருக்கின்றது எனவும் கர்தினால் Onaiyekan கூறினார்.
வெற்றிகரமான மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள்கூட மனமாற்றத்தின் அடையாளத்தைக் காட்டுவதில்லை, ஒவ்வொரு தலைமுறையும் அதன் சீரமைப்பில் செல்லவேண்டியிருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் கலந்து கொள்ளத் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட 115 கர்தினால்களுள் கர்தினால் Onaiyekanம் ஒருவராவார்.







All the contents on this site are copyrighted ©.