2013-03-08 15:37:24

2020ம் ஆண்டுக்குள் 14 கோடிக்கு மேற்பட்ட பாலிய மணப்பெண்கள் இருப்பார்கள், ஐ.நா.


மார்ச்,08,2013. தற்போது உலகில் இடம்பெற்றுவரும் பாலியத் திருமணங்களின் நிலை தொடர்ந்தால், 2020ம் ஆண்டுக்குள் 14 கோடிக்கு மேற்பட்ட பாலிய மணப்பெண்கள் இருப்பார்கள் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
இந்த 14 கோடிப் பேரில், 5 கோடிப் பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்களாய் இருப்பார்கள் எனவும் UNFPA என்ற ஐ.நா. மக்கள் தொகை நிதி நிறுவன இயக்குனர் Babatunde Osotimehin கூறியுள்ளார்.
18 வயதுக்குள் திருமணம் செய்யும் சிறுமிகள், தங்களது கணவர்களால் வன்முறைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்றும் கூறிய Osotimehin, பாலியத் திருமணங்களை நிறுத்துவதற்குச் சிறிதளவு முயற்சிகளே எடுக்கப்பட்டுள்ளன எனவும் எச்சரித்தார்.
திருமண வயதை 18, என 158 நாடுகள் வரையறுத்துள்ளபோதிலும், மரபு மற்றும் சமூக விதிமுறைகளின்படி நடக்கும் இளவயதுத் திருமணங்களை நிறுத்துவதற்குச் சட்டங்கள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன என்றும் UNFPA இயக்குனர் கூறியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.