2013-03-07 16:15:02

சுவாச ஆய்வின் முலம் வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய புதிய முயற்சி


மார்ச்,07,2013. சுவாச ஆய்வின் மூலம் வயிற்றுப் புற்று நோய் உள்ளதா என்பதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியும் எளிய, விரைவான ஒரு முறையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு நடத்தப்பட்ட 130 நோயாளிகளில், 90 விழுக்காட்டினருக்கு இது சரியாக பலனளித்தது என்று இந்த ஆய்வுகளை மேற்கொண்ட இஸ்ரேலிய மற்றும் சீன ஆய்வாளர்கள் குழு ஒன்று அறிவித்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் British Journal of Cancer என்ற இதழில் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளன. இக்குழு மேலும் ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்றுப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியறிப்பட்டால், அதனைக் குணமாக்கும் வழிகள் அதிகம் உள்ளதென்று கருதப்படுகிறது.
பொதுவாக பிரிட்டனில் வயிற்றுப் புற்று நோயாளிகளுக்கு, நோய் மிகவும் முற்றிய நிலையிலேயே இது கண்டறியப்படுகிறது. அவர்களில் 20 விழுக்காட்டினரே ஐந்தாண்டுகள் வரை உயிர் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.