2013-03-07 16:00:42

Hugo Chávezன் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து அனைத்து கர்தினால்களும் அனுப்பியுள்ள தந்திச் செய்தி


மார்ச்,07,2013. இவ்வியாழன் காலை கர்தினால்கள் கூடிய கூட்டத்தில் 152 கர்தினால்கள் கலந்துகொண்டனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்கள் 114. வியட்னாம் கர்தினால் Jean-Baptiste Pham Minh Man இவ்வியாழன் மாலை உரோம் வந்தடைவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இச்செவ்வாயன்று மரணமடைந்த Venezuela அரசுத் தலைவர் Hugo Chávezன் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து அனைத்து கர்தினால்களும் அனுப்பியுள்ள தந்திச் செய்தியை இவ்வியாழன் காலை கூட்டத்தில் கர்தினால்கள் அவையின் தலைவர் Angelo Sodano வாசித்தார்.
உரோம் நகரில் தற்போது கூடியுள்ள கர்தினால்கள் அனைவரும் இணைந்து இப்புதனன்று மாலை 5 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் மாலை செப வழிபாட்டையும், திரு நற்கருணை ஆசீரையும் மேற்கொண்டனர்.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவைக்குச் செபிப்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வழிபாட்டில் மக்கள் கலந்துகொள்ளலாம் என்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கானோர் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய நிர்வாகியான கர்தினால் Angelo Comastri தலைமையில் நிகழ்ந்த இந்த திருவழிபாட்டில் செபமாலை, மாலை செபங்கள் மற்றும் திரு நற்கருணை ஆசீர் ஆகியவை இடம்பெற்றன.








All the contents on this site are copyrighted ©.