2013-03-06 15:30:26

ஐ.நா. அமைப்பு Gaza பகுதியில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டம் இரத்து


மார்ச்,06,2013. பாலஸ்தீன நாட்டில், புலம்பெயர்ந்தோர் மத்தியில் துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள UNRWA என்ற ஐ.நா. அமைப்பு Gaza பகுதியில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டத்தை இரத்து செய்துள்ளதாக இச்செவ்வாயன்று அறிவித்தது.
ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ள இதுவரை 400 பெண்கள் உட்பட 807 பேர் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
இந்தப் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்ததையடுத்து, ஐ.நா. அமைப்பு இந்தப் போட்டியை இரத்து செய்துள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நிலவும் தொடர் போரினால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்ற காரணத்தால், அவர்களுக்கு ஓர் வடிகாலாக அமையும் வண்ணம் 2011ம் ஆண்டுமுதல் இந்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.
இந்த ஓட்டத்தில் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, பாலஸ்தீன குழந்தைகளுக்கு கல்வி வசதிகளும் விளையாட்டு வசதிகளும் அமைத்துத் தருவதில் UNRWA அமைப்பு ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறது.
Hamas என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் Gaza பகுதியில் Sharia முறை கட்டுப்பாடுகளைத் திணித்து வருவதை பல்வேறு அமைப்புக்கள் விமர்சித்து வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.