2013-03-04 15:52:07

லிபியாவில் 48 கிறிஸ்தவர்கள் கைது


மார்ச்,04,2013. லிபியாவின் Benghazi சந்தையில் உள்ள வியாபாரத் தலங்களில் கிறிஸ்தவத் திருவுருவம் மாட்டப்பட்டிருந்த ஒரே காரணத்திற்காக 48 எகிப்திய கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது லிபியக் காவல்துறை.
எகிப்து நாட்டைச் சேர்ந்த காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் 48 பேரை மொட்டையடித்து தண்டனை வழங்கி, இந்தக் கிறிஸ்தவர்கள் அனுமதியின்றி லிபியாவிற்குள் நுழைந்தவர்கள் என்ற காரணத்துடன் இவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது லிபியக் காவல்துறை. மொட்டையடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இக்கிறிஸ்தவர்களின் உடலில் தாக்கப்பட்டதற்கான காயங்களும் இருந்ததாக AsiaNews செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இவர்கள் மதக்காரணங்களூக்காகக் கைது செய்யப்படவில்லை, மாறாக உரிய அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் சில அருட்கன்னியர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து லிபியாவைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.