2013-03-02 15:37:53

Honduras கர்தினால் : இக்காலத்தில் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் முதலில் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும்


மார்ச் 02,2013. அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவரும் Honduras நாட்டின் Tegucigalpa பேராயருமான கர்தினால் Óscar Andrés Rodríguez Maradiaga, புனித பேதுருவின் வழிவருவதற்குச் சரியான நபர் யார் என்று தேர்ந்து தெளிவதற்கு முன்னர், இக்காலத்தில் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் முதலில் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
நாம் நம்பிக்கை ஆண்டில் இருக்கிறோம், எனவே திருஅவையின் முக்கிய பணியை எவ்வாறு தொடர்ந்து செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் கர்தினால் Maradiaga கூறினார்.
நற்செய்தியை அறிவிப்பதற்கு உலகாயுதப்போக்கு இன்று முக்கிய தடையாக இருக்கின்றது, பொருளியக் கோட்பாட்டில் கடவுள் வைக்கப்பட்டுள்ளார், கடவுளையும், அவர் உலகின்மீது கொண்டிருக்கும் அக்கறையையும் அறிவிப்பதற்காகத் திருஅவை இவ்வுலகில் இருக்கின்றது, இதுவே திருஅவையின் முக்கிய சவாலாகவும் இருக்கின்றது என்றும் கர்தினால் Maradiaga கூறினார்.
கான்கிளேவ் அவையில் தான் இரண்டாவது தடவையாக பங்கெடுக்கவிருப்பதாகவும், தூயஆவி அந்த அவையில் பிரசன்னமாய் இருப்பார் எனவும் Honduras கர்தினால் Maradiaga தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.