2013-03-01 15:44:02

திருப்பீடச் செயலகத்தின் @TerzaLoggia புதிய டுவிட்டர் வலைத்தளம்


மார்ச்01,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களது @Pontifex என்ற டுவிட்டர் சமூக வலைத்தளம் பிப்ரவரி 28ம் தேதி, இவ்வியாழக்கிழமையோடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து இவ்வியாழன் இரவு 8 மணிக்குப் பதவி விலகிய அவர், மாலை 5.15 மணிக்கு இறுதிச் செய்தியை அனுப்பினார். இந்த டிவிட்டர் செய்தியில், “உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு நீங்கள் என்றும் மகிழ்வை அனுபவிப்பீர்களாக” என்று எழுதியுள்ளார் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தற்போது @Pontifex என்ற டுவிட்டர் வலைத்தளம் காலியாக உள்ளது. அடுத்த திருத்தந்தை இப்பக்கத்தைப் பயன்படுத்தும்வரை அப்பகுதி காலியாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருக்கும் இந்நாள்களில், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற புதிய டுவிட்டர் வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.