2013-03-01 15:54:14

அதிகரித்துவரும் இனப்படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு உடனடி நடவடிக்கைக்கு ஐ.நா.வேண்டுகோள்


மார்ச்01,2013. உலகில் அதிகரித்துவரும் இன மற்றும் மதம் சார்ந்த பதட்டநிலைகளையும், அதனால் இடம்பெறும் படுகொலைகளையும் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த, படுகொலைகள் தடுப்புக்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் Adama Dieng இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
யூதஇனப் படுகொலைகள், கம்போடியாவின் கொல்லப்படும் நிலங்கள், ருவாண்டா மற்றும் Srebrenica இனப்படுகொலைகள், இன்னும்பிற பெருமளவான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்குப் பின்னரும், இந்த உலகம் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்றும் Dieng கூறினார்.
காங்கோ குடியரசு, ஈராக், கிர்கிஸ்தான், மாலி, மியான்மார், பாகிஸ்தான், சூடான், சிரியா என, பல்வேறு நாடுகளில், இன்றும், கடுமையான இன மற்றும் மதம் சார்ந்த பதட்டநிலைகளைக் காண முடிகின்றது என்றும் ஐ.நா. ஆலோசகர் Dieng கூறினார்.







All the contents on this site are copyrighted ©.