2013-02-28 16:21:13

புனித பூமியின் பராமரிப்பு நிதிக்கென கர்தினால் Leonardo Sandriயின் மடல்


பிப்28,2013. இறைவன் இன்றும் நம்மிடையே குடிகொண்டுள்ளார் என்பதன் அமைதியான சாட்சியமாக விளங்குவது புனித பூமியென்றும் அதனைக் காத்துவரும் திருஅவை அமைப்புக்களின் பணி பாரட்டுக்குரியதென்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தவக்காலத்தின் இறுதியில் கடைபிடிக்கப்படும் புனித வாரத்தில், புனித வெள்ளியன்று கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்து கோவில்களிலும் திரட்டப்படும் நிதி, புனித பூமியின் பராமரிப்புக்கென வழங்கப்படும்.
இந்த நிதிக்கென மக்களிடம் விண்ணப்பித்து மடல் ஒன்றை அனுப்பியுள்ள கீழைரீதி திருஅவை பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, புனித பூமி மீது அனைத்து திருத்தந்தையரும் காட்டி வந்துள்ள சிறப்பான ஈடுபாட்டை தன் மடலில் எடுத்துக் கூறியுள்ளார்.
நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய வெளிப்பாடாக புனித பூமியின் பராமரிப்பில் அனைத்து கத்தோலிக்கர்களும் ஆர்வமாய் ஈடுபடவேண்டுமென கர்தினால் Sandri அழைப்பு விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.