2013-02-27 16:19:13

சிரியாவுக்கு இராணுவத் தளவாடங்களை அனுப்புவதை நிறுத்துங்கள் - முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregory Laham


பிப்.27,2013. சிரியாவுக்கு இராணுவத் தளவாடங்களை அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்துலகையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று கிரேக்க மேல்கித்திய கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregory Laham விண்ணப்பித்துள்ளார்.
பிப்ரவரி 24, கடந்த ஞாயிறன்று தமாஸ்கு பகுதியிலும், Mazraa மாவட்டத்திலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களில் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 230க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregory Laham அகில உலக சமுதாயத்திற்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த வன்முறைத் தாக்குதல்களில் பள்ளிகளும், மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய முதுபெரும்தலைவர் Laham, சிரியாவில் நிலவும் பிரச்சனையைத் தீர்க்க, உலகின் அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.
உலக நாடுகளுக்கு, முக்கியமாக, அரபு நாடுகளுக்கும், திருத்தந்தை மற்றும் பன்னாட்டு ஆயர்கள் பேரவைகளுக்கும் இந்த விண்ணப்பத்தை தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து விடுப்பதாக முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregory Laham கூறினார்.








All the contents on this site are copyrighted ©.