2013-02-27 16:19:02

கர்தினால் Bechara Boutros Rai, வெள்ளிக்கிழமை முடிய மாஸ்கோவில் மேய்ப்புப்பணி பயணம்


பிப்.27,2013. அந்தியோக்கு மாரனைட் ரீதி கத்தோலிக்கத் தலைவரான கர்தினால் Bechara Boutros Rai, இச்செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை முடிய மாஸ்கோவில் மேய்ப்புப்பணி பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள கர்தினால் Boutros Rai, மத்திய கிழக்குப் பகுதியிலும், சிறப்பாக சிரியாவிலும் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலை அங்குள்ள திருஅவைத் தலைவர்களுடன் விவாதிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் பயணத்தின் முதற்கட்டமாக, அவர் மாஸ்கோவில் உள்ள புனித மரோன் கோவிலில் நடைபெற்ற ஒரு வழிபாட்டில் கலந்துகொண்டார்.
73 வயது நிரம்பிய கர்தினால் Boutros Rai அவர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கர்தினாலாக உயர்த்தினார். மாஸ்கோ பயணத்திற்குப் பின், கர்தினால் Boutros Rai வத்திக்கானில் நிகழவிருக்கும் Conclave கர்தினால்கள் அவையில் கலந்துகொள்வார்.








All the contents on this site are copyrighted ©.