2013-02-27 16:27:30

கம்போடியாவின் "கொல்லப்படும் நில"த்தில் பல்சமயக் கூட்டம்


பிப்.27,2013. ஐ.நா. அவை அறிவித்துள்ள ‘மதங்களுக்கிடையே நல்லுறவு வார’த்தின் ஒரு முயற்சியாக, கம்போடியாவின் "கொல்லப்படும் நிலம்" (Killing Fields) என்ற பெயர் தாங்கிய இடத்தில் பல்சமயக் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
கம்போடியாவில் பணிபுரியும் இயேசு சபை அருள் பணியாளர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கூட்டத்தில், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர், புத்தமதத்தினர் என பல சமயங்களையும் சார்ந்த இளையோர் பங்கேற்றனர்.
கம்போடிய நாட்டின் அடையாளமான "Ramdul" என்ற மணமுள்ள மலர் பூக்கும் மரக்கன்றுகள் இக்கூட்டத்தின் இறுதியில் "கொல்லப்படும் நிலம்" என்றழைக்கப்படும் Choeung Ek என்ற பகுதியில் நடப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.