2013-02-26 15:55:28

4வது ஆசியக் கூட்டத்தில் முஸ்லீம்-கிறிஸ்தவத் தலைவர்கள்


பிப்.26,2013. ஆசியாவில் நீதியை நிலைநாட்டுவதற்குப் பொதுவான செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்தில் 16 ஆசிய நாடுகளிலிருந்து 100க்கு மேற்பட்ட பிரதிநிதிகள், ஜகார்த்தாவில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள 4வது முஸ்லீம்-கிறிஸ்தவத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தொடங்கியுள்ள இக்கூட்டம் குறித்துப் பேசிய, அனைத்துலக இசுலாமிய வல்லுனர்கள் அவையின் பொதுச் செயலர் Hasyim Muzadi, நீதியை நிலைநாட்டுவதற்குப் பொதுவான செயல்திட்டத்தை உருவாக்குவதில் பல பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறினார்.
மார்ச் முதல் தேதி வரை நடைபெறும் இக்கருத்தரங்கை, இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர் பேரவையும், அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் அவையும் இணைந்து நடத்துகின்றன.







All the contents on this site are copyrighted ©.