2013-02-25 17:16:55

Conclave அவை எந்தத் தேதியில் கூடும் என்பதை முடிவு செய்யவேண்டியது கர்தினால்கள் அவையேயாகும்


பிப்.25,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியபின், 15 நாட்களுக்கும் முன்னதாகவே Conclave எனப்படும் சிறப்பு அவை கூட்டப்படலாம் என்று திருத்தந்தை அறிவித்துள்ளபோதிலும், எந்தத் தேதியில் கர்தினால்கள் கூடுவர் என்பதை முடிவு செய்யவேண்டியது கர்தினால்கள் அவையேயாகும் என்று கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi.
ஸ்காட்லாந்தின் Edinburgh பேராயர் கர்தினால் Keith Michael Patrick O’Brien நிர்வாகப் பணிகளிலிருந்து ஒய்வு பெறுவதற்கு வெளியிட்டுள்ள விருப்பத்தைத் திருத்தந்தை ஏற்றுள்ளதைக் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தத் திருப்பீடப் பேச்சாளர் Lombardi, கர்தினாலின் முடிவையே திருத்தந்தை ஏற்றுள்ளார் என்று விளக்கம் அளித்தார்.
பாலின அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கர்தினால் Patrick O’Brien, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, இது குறித்து திருப்பீடம் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi







All the contents on this site are copyrighted ©.