2013-02-23 17:11:23

மலாவியில் பதட்ட நிலைகள் களையப்பட தலத்திரு அவை அழைப்பு


பிப்.23,2013. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் மலாவி அரசின் நிலைகளை உணர்ந்துள்ள அதேவேளை, உரிமைகளுக்காகப் போராடும் அரசு அதிகாரிகளுடனும் மக்களுடனும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க திருஅவை விரும்புகிறது எனக் கூறியுள்ளனர் மலாவி ஆயர்கள்.
மலாவி நாட்டின் இன்றைய பதட்ட நிலைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளீயிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை, தொழிலில் எதிர்நோக்கும் தடைகள், வேலைவாய்ப்பின்மைகள், விலைகள் அதிகரிப்பு போன்ற மக்களின் நியாயமான கேள்விகளுக்கு அரசின் பதில்கள் திருப்தி தருபவைகளாக இல்லை என்ற தன் கவலையை வெளியிட்டுள்ளது.
அரசுப் பணியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே எழுந்துள்ள முரண்பாடுகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நாட்டின் வளர்ச்சியும் மக்களின் அன்றாட வாழ்வும், குழந்தைகளின் கல்வியும் எனக்கூறும் மலாவித் திருஅவைத்தலைவர்கள், பொதுநலனை மனதில் கொண்டு இருதரப்பினரும் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.