2013-02-23 17:14:41

மருந்து சோதனை: ஓராண்டில் 436 இந்தியர் பலி


பிப்.23,2013. மருந்துகளைச் சோதனை செய்யும் ஆய்வில், ஓர் ஆண்டு மட்டும் 436 பேர் பலியாகி உள்ளனர் என்பது தெரியவந்துள்ள நிலையில், மருந்து சோதனைக்கு பயன்படுத்தப்பட்டு மேலும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய், இதயக் கோளாறு, பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மற்றும் மருந்து ஒவ்வாமை அல்லது பல்வேறு நோய்களால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை நிர்வாகம் மருந்து சோதனைக்காகப் பயன்படுத்துவது உள்ளிட்டவையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 2011ம் ஆண்டு 436 பேரும், 2012ல் 668 பேரும் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் குலாம்நபி ஆசாத் மேலும் தெரிவித்துள்ளார்







All the contents on this site are copyrighted ©.