2013-02-22 15:49:48

சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகளே - UNICEFன் தலைவர்


பிப்.22,2013. சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகளே என்று இத்தாலியில் இயங்கிவரும் ஐ.நா.வின் கல்வி கலாச்சார அமைப்பான UNICEFன் தலைவர் James Guerrera கூறினார்.
சிரியாவின் போர் முடிவின்றி தொடர்ந்து வருவது ஒரு தலைமுறையையே அழிக்கும் ஆபத்து உள்ளதென்று கூறிய Guerrera, இந்நாட்டின் குழந்தைகளுக்கு உடனடி உதவிகள் செய்யாவிடில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மனக் காயங்களைத் தாங்கி வாழ்வார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஏனைய பிறரன்பு அமைப்புக்களுடன் சேர்ந்து UNICEF அமைப்பு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும், அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்ற இன்னும் மிக அதிகமான நிதியும் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர் என்று Guerrera எடுத்துரைத்தார்.
தற்போது நிலவிவரும் குளிர்காலத்தில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளே என்பதையும் UNICEF தலைவர் வருத்தத்துடன் அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.