2013-02-21 15:51:24

திருத்தந்தையின் முடிவு, பதவி மீது பற்றற்ற நிலைபற்றிய நல்லதொரு பாடம் - புத்தமதப் பேராசிரியர்


பிப்.21,2013. பதவி மீது பற்றற்ற நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பை விட்டு விலகுவது உலகிற்கு நல்லதொரு பாடம் என்று புத்த மதத்தைச் சார்ந்த பேராசிரியர் ஒருவர் கூறினார்.
தன் வலுவின்மையை உலகிற்கு பறைசாற்றி, ஒரு தலைவர் விலகுவது அனைவருக்குமே வழிகாட்டுதலாய் அமைந்துள்ளது என்று தாய்லாந்தைச் சேர்ந்த புத்தமத அறிஞரும் பேராசிரியருமான Channarong Boonnoon கூறினார்.
தனி மனிதர் மீது செலுத்தப்படும் கவனம், திருஅவை மீது திரும்ப வேண்டுமென்று திருத்தந்தை அறிவித்தது, தனி மனிதரின் எல்லைகளை நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறது என்று பேராசிரியர் Boonnoon சுட்டிக் காட்டினார்.
திருத்தந்தையின் முடிவு தாய்லாந்து கிறிஸ்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அவரது பணிவும், செப வாழ்வும் மக்களுக்கு ஓர் உந்து சக்தியாக உள்ளது என்று ராஜ்ஜபுரி (Rajchaburi) மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை Wongsawad Kaewsaenee கூறினார்.








All the contents on this site are copyrighted ©.