2013-02-19 15:22:33

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தங்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து பிரிட்டன் இளையோர் பகிர்வு


பிப்.19,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆழமான விசுவாசத்தின் அன்பு ஆசிரியர், மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பைத் துணிச்சலுடன் பாதுகாத்தவர், செப மனிதர், தாழ்ச்சியும் ஞானமும் மிக்கவர் என்று புகழ்ந்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு பால்ட்டிமோர் பேராயர் வில்லியம் லோரி.
திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்ட, அந்நாட்டின் பழமையான உயர்மறைமாவட்டப் பேராயர் லோரி, தனது பாப்பிறைப் பணியை நிறைவு செய்யும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகவும், அவரின் வழித்தோன்றலைத் தேர்ந்தெடுக்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காகவும் செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளார்.
மேலும், பிரிட்டனில், இந்தத் தவக்காலத்தின் ஒவ்வொரு நாளும் ஓர் இளையோர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தங்களின் வாழ்விலும் விசுவாசத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நடவடிக்கை திருநீற்றுப்புதனன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.