2013-02-19 15:12:40

ஜோர்டனிலுள்ள சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களைச் சந்திக்கச் செல்கிறார் கர்தினால் சாரா


பிப்.19,2013. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவுக்கான காரித்தாஸ் நிறுவனம் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கென, திருப்பீட Cor Unum பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் Robert Sarahவும், அந்த அவைச் செயலர் பேரருட்திரு Giampietro Dal Tosoவும் இச்செவ்வாயன்று ஜோர்டன் சென்றுள்ளனர்.
ஜோர்டனில் இச்செவ்வாய் முதல் வியாழன்வரை நடைபெறும் இக்கூட்டத்தில், மத்திய கிழக்குப் பகுதியில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாள்களில் ஜோர்டன் அரசரையும் சந்திக்கும் கர்தினால் Sarah, அந்நாட்டிலுள்ள சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களையும் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் 20 மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டை குறித்து அறிக்கை வெளியிட்ட Cor Unum பிறரன்பு அவை, சிரியாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளது.
சிரியாவிலிருந்து 10 இலட்சம் முதல் 25 இலட்சம் வரையிலான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெறும் வன்முறையில் ஒரு இலட்சம்பேர் வரை இறந்துள்ளனர் என்று சில புள்ளி விபரங்கள் கூறுகின்றன







All the contents on this site are copyrighted ©.