2013-02-18 15:45:30

எகிப்தில் கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டுள்ளது.


பிப்.18,2013. எகிப்தின் சர்சேனா கிராமத்திலுள்ள St.Georgas கோவிலினுள் புகுந்த இஸ்லாமியத் தீவிரவாத கும்பல் ஒன்று அக்கோவிலின் அரைவட்ட வடிவ முகப்பு மாடத்தையும் சிலுவையையும், கோவிலுனுள் இருந்த திரு உருவங்களையும் சேதமாக்கியுள்ளது.
இஸ்லாமியர்களின் குடியிருப்புக்கு அருகாமையில் இருக்கும் இந்த காப்டிக் கிறிஸ்தவசபைக் கோவில் இடிக்கப்படவேண்டும் என சிலகாலமாக மிரட்டி வரும் சலாஃபிஸ்ட் என்ற கும்பல் கடந்த வார இறுதியில் இக்கோவிலினுள் புகுந்து தாக்குதலை நடத்தியபோது, காவல்துறை எவ்வித தலையீடும் செய்யாமல் மௌனம் காத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்சேனா கிராமத்தில் வசிக்கும் ஏறத்தாழ 200 காப்டிக் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கென 1980களின் மத்தியில் கட்டப்பட்ட இக்கோவிலில், மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பெரிய ஓட்டையை உருவாக்கிய இந்த இஸ்லாமிய தீவிரவாத குழு, அதன் வழியாக அக்கோவில் குருவின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தது.
அக்கோவில் குரு Domadiosயை ஓர் இஸ்லாமிய குடும்பம் காரில் அடைக்கலம் கொடுத்து தப்பிக்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.