2013-02-15 16:29:19

சாவை வருவிக்கும் போலிமருந்துகள் வியாபாரத்தைத் தடை செய்வதற்கு ஐ.நா முயற்சி


பிப்.15,2013. போலிமருந்துகள் வியாபாரம், திட்டமிட்டக் குற்றக்கும்பல்களின் தொழிலுக்கு பல கோடி டாலர்களை ஈட்டிக் கொடுக்கின்றது என்று சொல்லி, அவ்வியாபாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு UNODC என்ற போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐ.நா. அலுவலகம் கூறியது.
சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் வியாபாரத்தை நிறுத்துவது குறித்து ஐ.நா.வில் தொடங்கியுள்ள கருத்தரங்கையொட்டி நிருபர்களிடம் பேசிய UNODC அலுவலகம், போலி மருந்துகள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கின்றன, சில சமயங்களில் அவை சாவை வருவிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் சில இடங்களின் சந்தைகளில் ஏறக்குறைய 30 விழுக்காட்டுப் போலிமருந்துகள் விற்கப்படுகின்றன என்று UNODC அலுவலகம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.